Friday, August 5, 2011

Tea Break

இந்த வார கல்கியில் கவிஞர் க.அம்சப்ரியா வின் நாய் வேட்டை கவிதையைப் படித்துவிட்டு,தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துவிட்டு,வழக்கம்போல் பின்னிரவில் புத்தகங்களோடு அமர்ந்தேன். சுந்தர்ராமசாமி கவிதைகள் தொகுப்பு. அதிலும் நாய்களைப் பற்றிய கவிதைகள். நாய்களைப் பற்றிய கூர்மையான பார்வையோடும்,அவற்றைக் குறியீடாகப் பயன்படுத்தியும் நிறைய கவிதைகள்.கோயில்மாடும்,உழவுமாடும் என்ற அவரின் சிறுகதையில் நாய் பற்றி எழுதியிருப்பார்.படித்தது நன்றாக நினைவுள்ளது.நாய் எழுந்து சோம்பல் முறிக்கும் காட்சியை படித்தபோது, ஏனோ அது எனக்கு ஆச்சரியமாகவும், பரவசமாகவுமிருந்தது.


இம்மூன்று நிகழ்வுகளின் உந்துதலில், நானுமொன்றைக் கிறுக்கினேன்.அது பின்வருமாறு.



புதிதாய் ஒருவர் முளைத்தால்
சங்கிலியால் பிணைக்கப்படாதிருந்தபோதிலும்
நாய்கள் தன்னிடத்திலிருந்தபடியே குரைக்கும்.

பயமுறுத்தப் பார்க்கும்.
உள்ளூர பயந்துபோயிருக்கும்.

இருவருக்கும் பொதுவாய்
ஒன்றோ ஒருவரோ வரும்போது சமாதானமடையும்.

பிறகு மெல்ல அருகில் வந்து
கைகளில் பண்டங்கள் இருக்கிறதாவென
முகர்ந்து முகர்ந்து பார்க்கும்.
வாலை அசைத்து உடலை ஆட்டி
காலைச் சுற்றிச் சுற்றி வளையவரும்.

சற்றுமுன் குரைத்த நாயா
இதுவென்ற ஆச்சரியம் வேண்டாம்.

மீண்டுமொரு நாள் பார்க்க நேர்ந்தால்
குரைக்கவும் செய்யலாம்.
குழையவும் செய்யலாம்.

நாய்களின் உலகில்
நிரந்தர நண்பர்களுமில்லை.
நிரந்தரப் பகைவர்களுமில்லை.


ஒரு நாய் எழுந்து
உறுமலோடு சொன்னது;
எதுவாயினும்
நேரடியாகப் பேசு.
நாங்கள் நன்றியுள்ளவர்கள்.

Kavithai

ரயில் பூக்கள்
பெட்டியில் இருந்த பெண்களை எல்லாம்
‘அக்கா’ என்று அழைத்தபடி
பூ விற்றுக் கொண்டிருந்தாள்,
சின்ன கைகளால் முழம் போட்டபடி.
முழம் சின்னதாக இருப்பதாக
முணுமுணுத்தவளுக்கு
தன் கை ரொம்ப பெரியது என்று
சொல்லிச் ச்மாதான செய்தாள்.
ஒரு சில அக்காக்களுக்கு அவளே
தலையில் வைத்துவிட்டாள்.
கைக்குழந்தைக்கு ஒன்றிரண்டு உதிரிப்
பூக்களைக் கொடுத்துக் கொஞ்சினாள்.
வியாபாரம் முடித்ததும்
கூடையை காலி சீட்-ட்ல் வைத்துவிட்டு
பெட்டியின் வாசலில் வந்து நின்றாள்;,
வேகக் காற்று கூந்தல் கலைக்க.
பாவாடையைக் கையில் பிடித்துகொண்டு
‘லா-லா’ என்று பாடிக்கொண்டு
மயில் போல முன்னும் பின்னும் மெதுவாக
ஆடிக்கொண்டிருந்தாள்,
அடுத்த ஸ்டேஷனில் நிற்கும் முன்னே
பூக்கூடையுடன் குதித்து இறங்கி
அடுத்த பெட்டிக்குப் போகும் வரை